செவ்வாய் கிரகத்தில், மைனஸ் 100 டிகிரி குளிரில், சீனாவின் ரோவர் விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
2020ம் ஆண்டு ஜூலை மாதம், செவ்வய் கிரகத்துக்கு முதல் முறையாக தியான்வென்-ஒன் என்ற விண்கலத்தை சீனா தனியாக அனுப்பியது.
அதனுடன் அனுப்பப்பட்ட ஜுரோங் ரோவர் விண்கலம், 350 நாட்களுக்கு மேலாக செவ்வாய் கிரகத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பயணித்து, புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
தற்போது அங்கு குளிர் காலம் என்பதால் நன்பகலில் மைனஸ் 20 டிகிரி குளிரும், நள்ளிரவில் மைனஸ் 100 டிகிரி குளிரும் நிலவி வருகிறது. அங்கு புழுதி புயல் வேறு வீசி வருவதால் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள சோலர் பேட்டரிகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் வானிலை மேலும் மோசமடையும் என்பதால், ரோவரின் பணி நேரம் குறைக்கப்பட்டதுடன், வானிலை சீரக இருக்கும் நேரத்தில் மட்டும் அது இயக்கப்பட்டு வருகிறது.